1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 15 டிசம்பர் 2023 (16:44 IST)

சென்னை புத்தகக் காட்சி தொடங்கும் தேதி அறிவிப்பு.. முதல்வர் திறந்து வைப்பாரா?

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்பதும் அந்த புத்தக கண்காட்சிக்கு இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து ஆயிரக்கணக்கான புத்தகங்களை வாங்கி செல்கின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் புத்தக கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 5ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும் இந்த புத்தக கண்காட்சி ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
 தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த புத்தக கண்காட்சி வழக்கம்போல் இந்த ஆண்டும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த கண்காட்சியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் சென்னை மக்கள் மத்தியில் இந்த புத்தக கண்காட்சி நல்ல வரவேற்பு பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva