ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 18 ஜூன் 2024 (08:28 IST)

அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு புதிய பொறுப்பு.. துரைமுருகன் அறிவிப்பு

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வடக்கு மாவட்ட அவைத்தலைவராக இருந்த சேகர் மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டதால் அவைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலுக்கு செஞ்சி மஸ்தான் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் வடக்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி மஸ்தான் அந்த பொறுப்பில் இருந்து திமுக விடுவித்த நிலையில் தற்போது அவருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக செஞ்சி மஸ்தானுக்கு பதிலாக டாக்டர் சேகர் என்பவர் நியமனம் செய்யப்படுவதாக துரைமுருகன் கடந்த வாரம் அறிவித்த நிலையில் தற்போது சேகரின் பதவி செஞ்சி மஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva