செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 25 ஜூன் 2022 (18:09 IST)

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில்  5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

இன்று தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒரு சில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய  மழை பெய்யக் கூடும். இதனல, தேனி, திருப்பூர்,கோவை, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 27,28, 29 ஆகிய தேதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.