வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 19 ஜூலை 2023 (17:33 IST)

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரமில்லை: மத்திய அரசு வாதம்

rummy
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் வாதம் செய்தார். 
 
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி காரணமாக பலர் தற்கொலை செய்த நிலையில் அரசியல் கட்சிகள் ஆன்லைன் ரம்மியை தமிழகத்தில் தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
 
இதன் அடிப்படையில் தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இது குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது என்றும் சென்னை நீதி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் வாதம் செய்துள்ளார். 
 
மேலும் ஆன்லைன் விளையாட்டுக்களில் சூதாட்டம் நடைபெறுவதை மத்திய அரசு தடுத்து வருகிறது என்றும் அவர் தன் வாதத்தில் கூறியுள்ளார்
 
Edited by Mahendran