செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 11 அக்டோபர் 2023 (10:55 IST)

கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர்.. தமிழகம் வந்ததால் விவசாயிகள் நிம்மதி..!

கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் தமிழகம் வந்தடைந்ததால் தமிழக விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இதனால் ஒகேனக்கல் பிலிகுண்டுலு பகுதிக்கு வருகின்ற நீரின் அளவு, திடீரென உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நேற்று முன்தினம் கர்நாடக அணைகளில் இருந்து சுமார் 7,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. அதுமட்டுமின்றி தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் நீர்வரத்து உயர்வு. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2528 கன அடியாக அதிகரிப்பு. இதனால் தமிழக விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
 
மேலும் இன்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் கூடும் நிலையில் தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவை கர்நாடகா மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு சாதகமான முடிவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran