குதிர வண்டியா கேக்குது... பாஜக மாநில தலைவர் முருகன் மீது வழக்கு!

Sugapriya Prakash| Last Modified சனி, 19 செப்டம்பர் 2020 (10:37 IST)
பாஜக மாநில தலைவர் முருகன் மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
சமீபத்தில் மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது பாஜக அலுவலகத்திற்கு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதி இல்லாமல் சாரட் வண்டியில் (குதிரை வண்டியில்) வந்ததாக பாஜக மாநில தலைவர் முருகன் மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 
முருகன் மட்டுமின்றி மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மாவட்ட தலைவர் சைதை சந்துரு உட்பட 6 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :