செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 மே 2023 (17:12 IST)

மாமல்லபுரம் அருகே பேருந்து - ஆட்டோ மோதல்.. 6 பேர் பரிதாப பலி..!

மாமல்லபுரம் அருகே பேருந்து மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தைகள் உள்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையில் இருந்து புதுவை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று எதிர் திசையில் வந்த ஆட்டோவில் மோதியது. அந்த ஆட்டோவில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் இரண்டு குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் என ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் 
 
உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களா அல்லது வெவ்வேறு நபர்களா என்பதை குறித்த விவரம் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து விபரம் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
இந்த விபத்தில் பலியானவர்கள் யார் என்பதை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran