சேலம் அருகே பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி: 30 பேர் படுகாயம்


Murugan| Last Modified திங்கள், 13 ஜூன் 2016 (13:37 IST)
ஒட்டுனரின் அஜாக்கிரதையால், சேலம் அருகே பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

 


சேலம் மாவட்டம், இளம்பிள்ளையிலிருந்து சித்திரகோவிலுக்கு தனியார் பேருந்து சேலத்திலிருந்து சென்று கொண்டிருந்தது. 
 
இளம்பிள்ளை அருகே சென்று கொண்டிருந்தபோதுஓட்டுநர் தனது இருக்கையிலிருந்து எழுந்து டேப்பில் பாடல் கேட்பதற்காக சி.டி. யை போட்டபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தரைப்பாலத்தை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது. 
 
இதில் 23 வயதான பூபதி என்பவர் சம்பவ இடத்திலேய பலியானார். மேலும் 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பேருந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். 
 
இந்த விபத்திற்கு காரணம் ஓட்டுனரின் அஜாக்கிரதையே காரணம் என பயணிகள் குற்றம் சாட்டினர். மேலும் தப்பியோடிய பேருந்து ஓட்னுனரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பயணிகள் வேண்டுகோள்விடுத்தனர். இதுகுறித்து இரும்பாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :