செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 31 ஆகஸ்ட் 2022 (16:29 IST)

திருமணமான இரண்டே நாளில் புதுப்பெண் விபத்தில் மரணம்: கதறியழுத கணவர்!

accident1
திருமணமான இரண்டே நாளில் புதுப்பெண் விபத்தில் மரணம்: கதறியழுத கணவர்!
திருமணமான இரண்டே நாளில் புதுமணப்பெண் விபத்தில் மரணம் அடைந்ததை அடுத்து அவரது கணவர் கதறி அழுத காட்சி காண்போரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
திருச்செங்கோடு மாவட்டம் புளியம்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அதே பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட ராமகிருஷ்ணா மற்றும் ஜீவிதா ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர் 
 
இந்த நிலையில் பைக்-கார் மோதிய விபத்தில் பைக்கில் பயணம் செய்த ராமகிருஷ்ணா சுப்பிரமணி, காரில் பயணம் செய்த ஜீவிதா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
 
ஜீவிதாவுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் மணமான இரண்டே நாட்களில் கணவன் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.