செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2023 (12:20 IST)

முதல்வர் ஸ்டாலின் காரை வழிமறிக்க முயன்ற பிஆர் பாண்டியன்.. குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்..!

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து போராட்டம் நடத்திய பிஆர் பாண்டியன் திடீரென தமிழக முதல்வர் காரை வழிமறிக்க முயன்றதை அடுத்து அவர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
காவிரி நீர் பிரச்சனை தற்போது உச்சக்கட்டத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி தமிழக விவசாயிகளும் காவிரிகள் தண்ணீர் விடக்கூடாது என்று கோரிக்கை விடுத்து கர்நாடக விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறந்து விட கோரியும் கர்நாடக அரசை கண்டித்தும் பி. ஆர். பாண்டியன் இன்று சென்னை மெரினாவில் சாலை மறியல் செய்தார். அப்போது அந்த வழியாக தலைமைச் செயலகத்துக்கு சென்று கொண்டிருந்த முதலமைச்சரின் காரை வழிமறிக்க முயன்றதை அடுத்து அவரை குண்டு கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர்.
 
Edited by Mahendran