செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ்
Last Updated : புதன், 21 செப்டம்பர் 2022 (15:24 IST)

மொபைல் விளையாட்டினால் பைத்தியமான சிறுவன்- பரவலாகும் வீடியோ

boy
இன்றைய  உலகில் அனைத்தும் மலிவாய்க் கிடைக்கிறது. அதனால், சிறுவர்களுக்கு அவர்கள் பெற்றோர் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்கிரார்கள். இல்லையென்றால் அவர்களே அதைப் பெற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது அவர்கள்தான் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் பப்ஜி, ஃப்ரிபயர் பாக்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் மொபைல் விளையாட்டுகள் அதிக சிறுவர்களிடமும், மாணவர்களிடமும் இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சில ஆன்லைன் கேம்களுக்கு அரசு தடையுத்தரவு போட்டிருந்தாலும் சிலர் இன்னும் அதை எப்படியாவது விளையாடிட வேண்டுமென நினைக்கிறார்கள்.

இந்த நிலையில், ஆன்லைன் கேம் விளையாட்டு எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, .

அதில், ஒரு சிறுவன் கையில் மொபைல் போனை இயக்குவது போல் கத்திக் கொண்டிருக்க, அவரை அங்குள்ள மரத்தில் கட்டிவைத்துள்ளனர்.

இந்த ஆன்லைன் கேமினால் அவருக்குப் பைத்தியம் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  இந்த வீடியோ பார்ப்பவர்களின் நெஞ்சம் கனத்துப் போகிறது.