1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 27 மே 2024 (13:49 IST)

3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் - வெற்றியைக் கொண்டாட தயாராக இருங்கள்..! அண்ணாமலை..!!

Annamalai
மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெல்லும் என்றும் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
சென்னை அமைந்தரையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்களின் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார்.
 
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, மக்களவைத் தேர்தலில் தென்னிந்தியாவில் இந்த முறை நாம் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார். டெல்லியில் பாஜக இந்த முறை 60 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் இது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் கூறினார்.

 
டெல்லி, குஜராத் போன்ற இடங்களில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார். எனவே, ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு பாஜக வெற்றியைக் கொண்டாட தயாராக இருங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.