1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (12:24 IST)

தோல்வியில் முடிந்த டீலிங்; தனித்து களமிறங்கும் பாஜக: அதிமுக ஷாக்!

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் பாஜக தனித்து போட்டியிட உள்ளது. இதற்கான வேட்பாளர் நேர்காணலையும் துவங்கியுள்ளது. 
 
நாங்குநேரி - விக்கிரவாண்டி மற்றும் புதுவை மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளுக்கான இடத்தேர்தல் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடாத நிலையில், இந்த இடைத்தேர்தலை சந்திக்க திமுக மற்றும் அதிமுக, காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தயாராகி வருகின்றன. இதில் காங்கிரஸைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டன.
இந்நிலையில் திமுக புதுச்சேரி தொகுதியை தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு கொடுத்த நிலையில், இதனை எதிர்த்து என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக - அதிமுக கூட்டணி போட்டியிடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. 
 
ஆனால், காமராஜர் நகர் இடைத்தேர்தல் குறித்து பாஜகவினருடன் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்து வேட்பாளர் நேர்காணல் பணிகளையும் துவங்கிவிட்டது. 
 
பாஜகவின் இந்த திடீர் முடிவால் அதிமுக, பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமா அல்லது என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டுமா என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படும் என தெரிகிறது.