புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 ஜூலை 2020 (11:52 IST)

சமூகநீதி பேச உங்களுக்கு என்ன தகுதியிருக்கு? – திமுகவை சாடும் எல்.முருகன்

கந்தசஷ்டி விவகாரத்தில் தொடர்ந்து திமுகவை பாஜக சாடி வரும் நிலையில் திமுக – பாஜக வாக்குவாதங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலில் கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக இந்த விவகாரம் தொடங்கியதிலிருந்தே பாஜக உறுப்பினர்கள் சிலர் யூட்யூஒப் சேனலுக்கு எதிராக பேசி வந்த நிலையில், மத உணர்வுகளை கறுப்பர் கூட்டம் காயப்படுத்துவதாக நடிகர்கல், நடிகைகள் சிலரும் பதிவிட்டிருந்தனர்.

தற்போது அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்தும் ஆதரவாக பதிவிட்டிருந்தார். அதேசமயம் கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலை கண்டித்துள்ள தி.க, திமுக அமைப்புகள் தங்களுக்கும் , அந்த யூட்யூப் சேனலுக்கும் தொடர்பில்லை என்றும், தங்கள் மீது சிலர் மக்களிடையே தவறான எண்ணத்தை உண்டாக்க இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் விளக்கமளித்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் இடஒதுக்கீடு விவகாரம் போன்றவற்றில் திமுக பேசி வருவது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் “சமூக நீதி குறித்து பேச திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை. கறுப்பர் கூட்டத்திற்கும் திமுகவிற்கும் என்ன சம்பந்தம் என்பதை விளக்க வேண்டும்” என்று கூறியுள்ளதோடு இந்த விவகாரத்தில் ரஜினி, சரத்குமார் தவிர வேறு யாருமே குரல் கொடுக்காதது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.