1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 28 மார்ச் 2020 (07:42 IST)

ஒரு எம்பியே மக்களை அச்சப்படுத்தலாமா? திமுக எம்பிக்கு பாஜக பிரமுகர் கேள்வி

ஒரு எம்பியே மக்களை அச்சப்படுத்தலாமா
திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் அவர்கள் அவ்வப்போது கொரோனா வைரஸால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், வைரஸ் பரவாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகிறார் 
 
மேலும் டாக்டர்களுக்கும் மருத்துவ ஊழியர்களுக்கும் மாஸ்க், கையுறை உள்பட சில பொருட்கள் தேவையான அளவு இல்லை என்றும் அதனை உடனடியாக தமிழக அரசு ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார் 
 
இந்த நிலையில் டாக்டர் செந்தில்குமார் அவர்களின் கருத்துக்கு பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
தி மு கவின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் ஒரு மருத்துவர் என்று அறிகிறேன். பொறுப்போடு இருக்க வேண்டிய ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து சமூக ஊடக பதிவுகளில் மக்களிடையே பதட்டத்தையும், அச்சத்தையும், அரசின் மீது நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்தி வருவது முறையல்ல
 
மக்கள் பிரதிநிதி நேரடியாக சுகாதார அமைச்சரிடமோ, முதல்வரிடமோ தன் ஆலோசனைகளை கூறலாம். இது எனது வேண்டுகோள். அறிவுரை அல்ல. விமர்சனம் அல்ல. இக்கட்டான நேரத்தில் அரசுடன் ஒத்துழைப்பதே ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு, மருத்துவருக்கு சிறப்பு. 
 
இதற்கு பதிலளித்துள்ள டாக்டர் செந்தில்குமார் எம்பி, ‘நன்றி., அரசு மருத்துவர்களின் நலன் காக்க பட வேண்டும் அவர்களுக்கு உலக தரம் வாய்ந்த பாதுகாப்பு PPE உபகரணம் வழங்க பட வேண்டும் என்பது தான் நோக்கம்’ என்று தெரிவித்துள்ளார்.