வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 நவம்பர் 2024 (16:22 IST)

'அமரன்’ படத்திற்கு வரிவிலக்கு.. மாணவர்களுக்கு இலவசம்.. வானதி சீனிவாசன் கோரிக்கை..!

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த "அமரன்" திரைப்படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக அந்த படத்தை திரையிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, "தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு தேசப்பற்று மிக்க திரைப்படமாக 'அமரன்' வெளியாகியுள்ளது. படக்குழுவினர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரித்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் விநியோகம் செய்தது கூடுதல் மகிழ்ச்சி.

'அமரன்' திரைப்படத்தை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக திரையிட ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக முதல்வர் ரசித்த இந்த படத்தை தமிழகத்தின் மாணவ செல்வங்களும் ரசிக்க வேண்டும். அதேபோல், 'அமரன்' படத்திற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்," என்றும் கூறினார்.

"வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் பாஜகவின் லட்சியம்," என்றும் உணவு, மொழி சார்ந்து பாஜக மீது வைக்கப்படும் விமர்சனங்கள் உண்மையல்ல என்றும் வானதி சீனிவாசன் கூறினார். மேலும், "ஒரே நாடு ஒரே தேர்தலில் இருக்கக்கூடிய சாதக பாதகங்களை அரசியல் கட்சிகள் யோசிக்க வேண்டும். விஜய் உள்பட யாரும் இந்த திட்டத்தை எதிர்க்க கூடாது," என்று அவர் தெரிவித்தார்.


Edited by Mahendran