தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வருகை: பாஜகவினர் உற்சாக வரவேற்பு!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை துபாய் வழியாக லண்டன் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார்.
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பு படிப்பதற்காக துபாய் வழியாக லண்டன் புறப்பட்டு செல்ல வந்த அண்ணாமலைக்கு
சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக துணை தலைவர் கரு நாகராஜன் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது
பாஜகவினர் அண்ணாமலையை கட்டி தழுவியும் செல்பி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்
நான்கு மாதம் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேல் படிப்பு படிக்க இருப்பதும் 4 மாத படிப்பை முடித்துவிட்டு டிசம்பர் மாதம் இறுதிக்குள் சென்னை திரும்புவார் என்று அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.