1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 ஜூன் 2023 (11:16 IST)

முதல்வர் குறித்து அவதூறு! பாஜக விருது பெற்ற பெண் நிர்வாகி கைது!

BJP IT wing
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியதாக பாஜக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.



கடந்த சில ஆண்டுகளில் பாஜக தமிழ்நாட்டில் தனது ஐடி விங்கை சிறப்பாக மேம்படுத்தி வருகிறது. பாஜகவின் கருத்துக்களை பரப்புவதோடு, ஆளும் கட்சியான திமுகவை விமர்சிக்கும் கருத்துகளையும் பாஜக ஐடி விங்கை சேர்ந்தவர்கள் பதிவிட்டு வருகின்றனர். அவ்வாறாக கோவை மாவட்டத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி உமா கார்கி பல கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

அதில் திமுக, பெரியார், கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய அவதூறு கருத்துக்களை பரப்பியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கோவை சைபர் க்ரைம் போலீஸார் உமா கார்கியை கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த பாஜக விழாவில் சிறந்த சமூக ஊடக செயல்பாட்டிற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைகளில் விருது பெற்றவர் உமா கார்கி என்பது குறிப்பிடத்தக்கது.