எல்,முருகன், அண்ணாமலை போட்டியிடும் தொகுதிகள் எவை? கசிந்த தகவல்!
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்த தகவல்களும் தற்போது இணையதளங்களில் கசிந்து வருகிறது
மயிலாப்பூர், காரைக்குடி, சேப்பாக்கம், வேளச்சேரி, காஞ்சிபுரம், திருத்தணி, பழனி, சிதம்பரம், கிணத்துக்கடவு, கோவை தெற்கு, ராசிபுரம், ஆத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ஓசூர், தூத்துக்குடி, நெல்லை, ராஜபாளையம் மற்றும் சென்னை துறைமுகம் ஆகிய 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாஜக பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதி குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன்படி தமிழக பாஜக தலைவர் எல் முருகன் ராசிபுரம் தொகுதியிலும், அண்ணாமலை கிணத்துக்கடவு தொகுதியிலும், கேடி ராகவன் மயிலாப்பூர் தொகுதியிலும், ஹெச்.ராஜா காரைக்குடி தொகுதியிலும், போட்டியிடுவார்கள் என கூறப்படுகிறது
அதேபோல் சேப்பாக்கம் தொகுதியில் குஷ்பு போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் சரியாக இருக்குமா என்பதை பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் போது பார்த்து தெரிந்து கொள்வோம்