செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 20 மார்ச் 2021 (11:51 IST)

பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைப்பு?

அரவக்குறிச்சியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை வேட்புமனுவை ஏற்பதில் சிக்கல்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் கடந்த 12 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்து வந்தனர். 
 
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நேற்று வரை 7,133 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 6,080 பேரும், பெண்கள் 1,050 பேரும் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.
 
அதன்படி, தமிழக பாஜக துணை தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தன் மீதான வழக்குகள் குறித்து அண்ணாமலை வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை என்ற எதிர்க்கட்சியினர் புகாரை அடுத்து அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் சிறிது நேரம் நிறுத்தி வைத்தனர். பின்னர் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அவரது மனு ஏற்கப்பட்டது.