வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 ஜனவரி 2022 (14:11 IST)

தமிழக அரசு வாகன ஊர்வலத்தை பாஜக வரவேற்கிறது – அண்ணாமலை!

குடியரசு தின விழா அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசு வாகனத்தை மாநிலத்திற்கு ஊர்வலம் கொண்டு செல்வதை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

இந்திய குடியரசு தினம் ஜனவரி 26 அன்று டெல்லியில் கொண்டாடப்படும் நிலையில் அதில் நடைபெறும் அணிவகுப்பில் இடம்பெறுவதற்காக மாநில அரசுகளின் வாகனங்கள் தகுதி சுற்றில் கலந்து கொண்டன. அதில் தமிழகத்தின் வாகனம் நிராகரிக்கப்பட்டது. தமிழக வாகனத்தில் இடம்பெற்ற வேலுநாச்சியார், வ.ஊ.சி போன்றோரை பலருக்கு தெரியாது எனக் கூறி நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நிராகரிக்கப்பட்ட தமிழக வாகனத்தை தமிழகம் முழுவதும் ஊர்வலம் கொண்டு செல்ல உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்பை ஆதரிப்பதாக பேசியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தமிழக வீரர்களை தமிழகம்தோறும் கொண்டு சேர்க்கும் என வரவேற்பு தெரிவித்துள்ளார்.