வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (17:07 IST)

கேட்டது 15, கிடச்சது 5: ஒருவழியாக முடிந்தது பாஜக - அதிமுக தொகுதி பங்கீடு!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக - காங்கிரஸ் - விசிக -மதிமுக - இடது சாரிகள் அடங்கியப் பலமான கூட்டணி உருவாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாகவே இந்தக் கூட்டணி அறிவிக்கப்பட்டாலும் இன்னும் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு சீட் என்ற விவரம் இன்று வரையில் வெளியாகவில்லை.
 
ஆனால் அதிமுக கூட்டணியில் பாஜக - பாமக - தேமுதிக ஆகிய கட்சிகள் இணைவது நேற்று வரையில் வெறும் யூகங்களாகவே இருந்தது. ஆனால் இன்று காலை பாமகவோடு கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது அதிமுக. அந்தக் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. 
 
அதையடுத்து மதியம் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தலைமையிலான பாஜக குழு அதிமுகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி ஒதுக்கீடு நடந்து முடிந்துள்ளது. 
பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதன மூலம் பாஜகவோடு கூட்டணி அமைத்து அதிமுக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாடளுமன்ற தேர்தலை சந்திப்பது உறுதியாகியுள்ளது. 

பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையின் முதற்கட்டத்தின் போது 15 தொகுதிகள் வேண்டும் என கோரிக்கை முன்வைத்த நிலையில் தற்போது 5 தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அடுத்து தேமுதிகவிற்கு எந்தனை தொகுதிகள் வழங்கப்படும் என்பது விரைவில் தெரியவரும்.