1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (18:44 IST)

ஒரு பிச்சைக்கார தமிழ் மாணவன் லண்டன் போன கதை!

ஜெயவேலுவின் குடும்பத்தினர் 80 களில் நெல்லூரில் இருந்து குடிபெயர்ந்து, சென்னை வந்து வீதிகளில் பிச்சை எடுப்பதை தங்கள் தொழிலாக கொண்டனர்.


 
 
இவர்கள், சென்னையில் உள்ள, நடைபாதையில் தான் உறங்குவார்கள். மழை வந்தால், அருகில் இருக்கும் கடைகளில் தஞ்சம் புகுவோர்கள். அதுவும், காவல்துறையினர் அவர்களை வந்து விரட்டும் வரை தான்.  ஜெயவேலு சிறியவராக இருக்கும்போதே அவரின் தந்தை இறந்துவிட்டார். அதன் பிறகு அவரின் தாய் மதுவிற்கு அடிமையாகிவிட்டார்.

ஜெயவேலு பிச்சை எடுத்து கொண்டு வரும் பணத்தை அவர் குடித்தே அழித்தார். ஜெயவேலுவிடம் அணிவதற்கு ஒரு சட்டை மட்டுமே இருந்தது. அவர் பார்பதற்கு அசுத்தமாக இருந்தார். 
 
சென்னையில் தொண்டு நிறுவனம் வைத்து பொது சேவைகள் செய்யும் உமா முத்துராமனும் அவரது கணவரும் ஜெயவேலுவை பார்த்து பரிதாபப்பட்டு, பள்ளியில் சேர்த்து விட்டார்கள். ஜெயவேல் 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தார். பின் லண்டனில் இருக்கும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதால் அவருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆட்டோமொபைல் பொறியியல் படிக்க வாய்ப்பு கிடைத்து.

தற்போது, அப்படிப்பையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு, மேல் படிப்பிற்காக இத்தாலி செல்கிறார். அவரின் படிப்பு செலவு முழுவதையும் உமா முத்துராமன் தங்கள் தொண்டு நிறுவனம் மூலம் மேற்கொள்கின்றனர்.