திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 25 நவம்பர் 2020 (10:46 IST)

சென்னையில் பேனர், கட் அவுட்களை 12 மணிக்குள் நீக்க உத்தரவு

சென்னையில் பேனர், கட் அவுட்களை 12 மணிக்குள் நீக்க உத்தரவு
வங்க கடலில் உருவான நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது சென்னையில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 
 
இந்த நிலையில் பலத்த காற்று காரணமாக சென்னையில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் பேனர் மற்றும் கட்அவுட்கள் கீழே விழுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் இதனால் உயிர் சேதம், பொருள் சேதம் அடைய வாய்ப்புகள் இருப்பதாகவும் எனவே உடனடியாக சென்னையில் உள்ள அனைத்து பேனர் கட்அவுட்கள்களை இன்று மதியம் 12 மணிக்குள் நீக்கவேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்
 
புயல் காரணமாக அசம்பாவிதங்கள் நிகழாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேனர்களை அகற்ற வேண்டும் என்றும் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்
 
இந்த நிலையில் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் மரம் ஒன்று சாலையில் விழுந்தது. இந்த மரத்தை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்