ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (16:04 IST)

விமானங்கள் நிறுத்தம்.. வங்கதேசம் செல்ல முடியாமல் சென்னையில் தவிக்கும் முதிய தம்பதி..!

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து தன்னுடைய தாய் நாடான வங்கதேசத்துக்கு செல்ல முடியாமல் முதிய தம்பதி சென்னையில் தவித்துக் கொண்டிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
வங்கதேசத்தை சேர்ந்த 73 வயது  சுஷில் ரஞ்சன் என்ற முதியவர் தனது மனைவியுடன் தமிழகத்தில் உள்ள வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். தனது மனைவிக்கு புற்றுநோய் என்பதால் அவருடைய நோய் குணமாக வேலூருக்கு வந்த நிலையில் சிகிச்சை முடிந்து தற்போது சொந்த ஊர் செல்ல முடிவு செய்த நிலையில் தான் திடீரென விமானங்கள் நிறுத்தப்பட்டதை அறிந்தார்.
 
இந்த நிலையில் விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் அவர் சென்னையில் விமான நிலையத்தில் செய்வதறியாது தவித்து வருவதாக கூறப்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட  மனைவியுடன் சென்னை விமான நிலையத்தில் வ வங்கதேசத்தை சேர்ந்த 73 வயது முதியவர் பரிதாபமாக இருக்கும் நிலையில் அவருக்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள் ஆறுதல் கூறியுள்ளனர்.
 
விரைவில் உங்கள் நாட்டுப் பிரச்சனை தீர்ந்துவிடும், விமான சேவை தொடங்கிவிடும், அப்போது செல்லலாம் என்று கூறியுள்ளனர். இதனால் அவர் தனது மனைவி உடன் விமான நிலையத்தில் கண்கலங்கி இருக்கும் காட்சி காண்போரை கண்ணீரை வரவழைத்ததாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran