வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (17:31 IST)

ஆர்.எஸ். பாரதி மீதான அவதூறு வழக்கிற்குத் தடை !

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீதாக அவதூறு வழக்கிற்குத் தடை விதித்துள்ளது நீதிமன்றம்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு தெரிவித்ததற்காக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டடது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். எனவே  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீதாக அவதூறு வழக்கிற்குத் தடை விதித்துள்ளது நீதிமன்றம்.

மேலும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது தொடர்பாகப் பேசியதான வழக்கில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது