காங்கிரஸில் இணைந்தார் ஜெயலலிதாவின் பள்ளித்தோழி
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா அவர்களின் பள்ளித்தோழியும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பதர் சையத் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அவருக்கு நெருக்கமானவர்கள் பலர் அதிமுகவில் இருந்து மாற்றுக்கட்சியில் இணைந்து வரும் நிலையில் ஜெயலலிதாவின் பள்ளித்தோழியும், சென்னை திருவல்லிக்கேணி தொகுதியில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை எம்.எல்.ஏவாக இருந்தவருமான பதர் சையத் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் சற்றுமுன் பதர் சயித் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஜெயலலிதாவின் தோழி என்பதால் அவருக்கு கட்சியில் உரிய மரியாதை அளிக்கப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன