திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2016 (14:41 IST)

பண தட்டுப்பாடு பிரச்சனையிலும் ஆட்டோ டிரைவரின் நல்ல மனசு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லப்பா (25), சென்னை அடையாறில் உள்ள தனியார் புத்தக நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார்.


 

வேலூரில் தனியார் பள்ளிக்கு அளிக்கப்பட்ட புத்தகங்களுக்கான தொகை ரூ.35 ஆயிரத்தை வசூலித்த செல்லப்பா ஆட்டோவில், தங்கியிருந்த அறைக்குச் சென்றபோது பையினை ஆட்டோவில் விட்டுச் சென்றார்.

சிறிது நேரத்தில் பையை ஆட்டோவில் விட்டுச் சென்றது தெரிய வரவே, இதுகுறித்து வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதற்கிடையில் இரவு காவல் நிலையத்துக்குச் சென்ற சலவன்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலா (37) தனது ஆட்டோவில் பயணம் செய்தவர் பையை தவற விட்டுச் சென்றதாகக் கூறி ஒப்படைத்தார்.

காவல்துறையினர் அந்த பையைத் திறந்து பார்த்ததில் அதில் ரூ.35 ஆயிரம் இருந்தது. இதையடுத்து செல்லப்பாவை காவல் நிலையத்துக்கு வரவழைத்து பணத்தை காவல் துறையினர் ஒப்படைத்தனர். ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை அங்கிருந்த அனைவரும் பாராட்டினர்.