1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 23 செப்டம்பர் 2023 (18:34 IST)

ரூ.9000 பணம் யாருடையது.. சைபர் க்ரைமில் புகார் அளித்த ஆட்டோ டிரைவர்..!

சமீபத்தில் சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர்  ராஜ்குமார் என்பவர் வங்கி கணக்கில் திடீரென ரூ.9000 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டதை அடுத்து அவர் அதிலிருந்து 21,000 செலவு செய்துவிட்டார். 
 
இதனை அடுத்து வங்கியில் இருந்து பேச்சு வார்த்தை நடத்தி அந்த 21,000 ரூபாயை வங்கி லோன் ஆக வைத்துக்கொள்ளும்படி  கூறினார். இதனை அடுத்து பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. 
 
மேலும் அவரது வங்கி கணக்கில் இருந்த 9000 கோடியை வங்கி திரும்பவும் எடுத்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தன்னுடைய வங்கி கணக்கில் வந்த 9 ஆயிரம் கோடி யாருடையது என்றும் முறைகேடாக வந்த பணமா என்பது குறித்து ஆய்வு செய்யவும் என்றும் சைபர் க்ரைம் போலீசாரிடம் ஆட்டோ டிரைவர் ராஜ்குமார் புகார் அளித்துள்ளார் 
 
இந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran