திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 22 ஜனவரி 2018 (09:52 IST)

9 வயது சிறுமிக்கு 39 வயதுடைய ஆணுடன் திருமணம் நடத்த முயற்சி

திருச்சி அருகே 9 வயது சிறுமிக்கு, அவரது 39 வயதுடைய மாமாவுடன் நடக்கவிருந்த  திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
திருச்சி மாவட்டம், தொட்டியத்தை அடுத்துள்ள மின்னத்தாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளி. இவரது 9 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், 4-ம் வகுப்பு படித்துவந்தார். சிறுமிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த மணி(39) என்பவருடன் திருமணம் செய்துவைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மற்றும் குழந்தைகள் நலக் குழுவினர் சிறுமியை மீட்டனர்.  போலீஸார் வருவதையறிந்த வாலிபர் மற்றும் அவரது உறவினர்கள் தலைமறைவாகி விட்டனர்.
 
குழந்தைகள் நலக்குழுவினர் கிராமத்தினரிடையே நடத்திய விசாரணையில், சிறுமியைச் சார்ந்த உறவுமுறை விட்டுவிடக்கூடாது என்றும் பெண்கள் கொஞ்சம் வளர்ந்துவிட்டால் தங்கள் விருப்பத்துக்கு யாரையும் தேர்ந்தெடுத்துவிடக்கூடாது என்பதற்காகவும், சிறு வயது பெண்ணை எவ்வளவு வயதான ஆண் என்றாலும் திருமணம் முடித்துக்கொடுக்கும் நடைமுறை அந்தக் கிராமத்தில் வசிக்கும் குறிப்பிட்ட சமூக மக்களிடம் இருப்பது தெரியவந்தது. அதிகாரிகள் சிறுமியின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு தங்கள் பாதுகாப்பில் வளர்க்கவும் படிக்கவைக்கவும் ஏற்பாடுகள் செய்துவருகின்றனர்.