செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திங்கள், 7 அக்டோபர் 2024 (17:00 IST)

காவல் உதவி ஆய்வாளரின் அட்டூழியம்!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் ஜீவானந்தம் என்பவர் மதுக்கூர் கடைவீதிகளில் மாமுல் வசூலிப்பது வழக்கம்.
 
கடந்த ஐந்து
05.10.2024அன்று வழக்கம் போல மதுக்கூர் முக்கூட்டுசாலையில் அமைந்துள்ள திருநாவுக்கரசு கடையில் மாமூல்  கேட்டுள்ளார்.
 
கடையை  இப்போது தான்  திறந்தேன்  மறுநாள் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கெஞ்சியும்  காலில் விழுந்து சொல்லியும் கேட்காத துணை ஆய்வாளர் அவரை கடுமையாக மிரட்டியும் அவரது கன்னத்தில் அறைந்தும் உள்ளார்.
 
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.