'அதே கண்கள்' ஃபர்ஸ்ட் லுக்!
கலையரசன், ஜனனி, ஷிவதா நடிப்பில், ரோஹின் இயக்கும் படம் அதே கண்கள்.
ரோஹின், இயக்குநர் விஷ்ணுவர்தனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். சி.வி. குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார், ரவி வர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 1967 ஆம் ஆண்டு திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த படம் அதே கண்கள். அப்படத்தின் தயாரிப்பாளரிடம் அனுமதி பெற்று இந்தத் தலைப்பு பயன்படுத்தயுள்ளனர்.