திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 29 ஜூன் 2017 (12:32 IST)

சூனியம் எடுக்க சென்ற வீட்டில் வசிய மருந்து தடவி பெண்ணை பலாத்காரம் செய்த ஜோதிடர்!

சூனியம் எடுக்க சென்ற வீட்டில் வசிய மருந்து தடவி பெண்ணை பலாத்காரம் செய்த ஜோதிடர்!

சேலம் மாவட்டத்தில் ஒரு வீட்டில் சூனியம் இருப்பதாக கூறி அங்கு பூஜை சென்று அதனை எடுக்க சென்ற கேரள ஜோதிடர் நந்தகுமார் என்பவர் அங்கு பெண்ணை வசிய மருந்து தடவி பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் கணவர் ஜோதிடர் நந்தகுமாரை கொலை செய்துள்ளார்.


 
 
கோவிந்தன் என்பவர் தலைவாசலில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளன. அதில் மூத்த மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பல மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சரியாகாததால். ஜோதிடர் ஒருவரை அழைத்து வீட்டில் பூஜை செய்துள்ளார்.
 
அந்த ஜோதிடர் 6 நாட்கள் அவரது வீட்டில் தங்கி இருந்து பூஜை செய்துள்ளார். இந்த ஆறு நாட்களும் அவருக்கு நாட்டுக்கோழி சமைத்து முட்டை வருவலுடன் விருந்து வைத்துள்ளார். பின்னர் உங்களுக்கு யாரோ சூனியம் வைத்துள்ளனர், சிறப்பு பூஜைகள் செய்து அதனை எடுக்க தனித்தனியாக ஒவ்வொருவரையும் பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
 
பூஜை செய்யும் முன்னர் மது பாட்டில்கள் வேண்டும் என கூறி அதனை வாங்கி குடித்த அந்த ஜோதிடர், முதலில் கோவிந்தனின் மனைவியை தனி அறையில் கூட்டி சென்று பூஜை செய்வதாக கூறி அவர் மீது வசிய மருந்தை தடவி பலாத்காரம் செய்துள்ளார்.
 
அதன் பின்னர் வெளியே வந்த கோவிந்தனின் மனைவி ஜோதிடர் தன்னை பலாத்காரம் செய்ததை கணவனிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கோவிந்தன் இது குறித்து ஜோதிடரிடம் கேட்டுள்ளார்.
 
அதற்கு நான் அப்படித்தான் செய்வேன், உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, உன் குடும்பத்தையே சூனியம் வைத்து அழித்துவிடுவேன் என மிரட்டியுள்ளார் ஜோதிடர். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்த இவனை இப்படியே விட்டால் பல குடும்பங்களை நாசம் செய்துவிடுவான் என கூறி இரும்பு கம்பியால் ஜோதிடர் நந்தகுமாரின் தலையில் அடித்து கொலை செய்துள்ளார்.
 
பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் வைத்து நாட்டாமங்கலம் ஏரி பகுதிக்கு கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி நந்தகுமாரின் உடலை எரித்துள்ளார் கோவிந்தன். இதனையடுத்து கோவிந்தனை கைது செய்த போலீசார் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.