ஆருத்ரா மோசடி வழக்கு: பிரபல நடிகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்
நடிகர் ஆர்.கே.சுரேஷ் துபாய்க்குத் தப்பிச் சென்றதாக கூறப்படும் நிலையில்,பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் லுக் அவுட் நோட்டடீஸ் அனுப்பியுள்ளனர்
ஆரூத்ரா கோல்டு நிறுவனம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட தனியார் நிதி நிறுவனம் ஏராளமான மக்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஏராளமான புகார்கள் வந்த நிலையில் பொருளாதார சிறப்பு பிரிவு போலீஸார் ஆருத்ரா நிறுவனத்திற்கு தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடத்தியதுடன், மோசடியில் தொடர்புடைய ஹரிஷ், மைக்கெல் ராஜ் உள்ளிட்ட 13 பேரை கைது செய்து, இந்த நபர்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதுகுறித்து, இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசையம்மாள், ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை ரூ..35 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருட்கள் மற்றும் 22 கார்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று கூறினார்.
இவ்வழக்கில் தொடர்புடைய நடிகர் ஆர்.கே.சுரேஷ் துபாய்க்குத் தப்பிச் சென்றதாக கூறப்படும் நிலையில், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள ரூசோ அளித்த வாக்குமூலத்தின்படி, நடிகர் ஆர்.கே.சுரேஷ் பற்றி அனைத்து விமான நிலையங்களுக்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் லுக் அவுட் நோட்டடீஸ் அனுப்பியுள்ளனர்.