திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 31 ஜூலை 2017 (05:20 IST)

விடுதலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை! பரோலிலாவது விடுங்கள்: அற்புதம்மாள் கெஞ்சல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய கடந்த பல வருடங்களாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார் அவருடைய தாயார் அற்புதம்மாள். ஆனால் அவருக்கு இதுவரை கிடைத்ததோ ஏமாற்றம்தான்.



 
 
தனது மகனின் இளமை வாழ்க்கை முழுவதுமே சிறையில் கழிந்துவிட்டதாக கூறும் அற்புதம்மால் விடுதலை செய்யாவிட்டாலும், பரோலிலாவது விடுங்கள் என்று தற்போது கோரிக்கை வைத்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தபோது, சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து பரோலில் விடுவது குறித்த ஆலோசனை செய்யப்படும் என்று கூறினாராம். இதுகுறித்து அற்புதம்மாள் கூறியபோது, 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என் மகனை விடுதலை செய்வேன் என்று வாக்கு கொடுத்திருந்தார். அந்த வாக்கை தற்போதைய முதல்வர் காப்பாற்றவேண்டும்." என்றார் கலங்கிய கண்களோடு கூறினார்.