வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 27 ஜனவரி 2021 (19:16 IST)

நாளை பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் அர்ஜூனா மூர்த்தி: முக்கிய அறிவிப்பா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்டு இருந்த நிலையில் அவருடைய அரசியல் கட்சியின் ஆலோசகராக அர்ஜுனா மூர்த்தி என்பவர் நியமனம் செய்யப்பட்டார் ரஜினியின் கட்சிக்காகவே அவர் பாஜகவிலிருந்து விலகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ரஜினி அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்ட நிலையில் இன்று காலை அர்ஜூனா மூர்த்தி ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் ரஜினிகாந்த் கூறிய மாற்றம் நிச்சயம் நிகழும் என்று அவர் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் நாளை காலை 11 மணிக்கு அர்ஜுனா மூர்த்தி பத்திரிக்கையாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் குறிப்பாக புதிய அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது