வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 டிசம்பர் 2021 (08:23 IST)

பவாரியா கும்பல் போல ப்ளான் செய்து கொள்ளை! – அரக்கோணத்தில் பரபரப்பு!

அரக்கோணத்தில் மர்ம கும்பல் ஒன்று தீரன் பட பாணியில் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் அருகே செய்யூர் கன்னிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆடிட்டர் புஷ்கரன். சம்பவத்தன்று இரவு புஷ்கரனின் வீட்டு கதவை யாரோ தட்டியுள்ளார்கள். திறந்து பார்த்தபோது பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கும்பல் வெளியே நின்றுள்ளது.

அதை பார்த்த புஷ்கரன் உடனே கதவை சாத்தியுள்ளார். ஆனால் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கதவை உடைத்துக் கொண்டு வந்த மர்ம கும்பல் புஷ்கரன் மற்றும் குடும்பத்தினரை அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்கியுள்ளனர். பிறகு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

தீரன் படத்தில் வரும் பவாரியா கொள்ளை கும்பல் போல நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 12ம் தேதி ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் வீட்டில் திருடுபோன துப்பாக்கி இந்த கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.