1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 25 ஏப்ரல் 2022 (16:54 IST)

நடிகை காயத்ரி ரகுராமுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமின்: சென்னை உயர்நீதிமன்றம்

gayathri
நடிகையும் பாஜக பிரபலமான காயத்ரி ரகுராமுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் முன் ஜாமீன் அளித்துள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோயம்பேடு பகுதியில் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பாஜக மற்றும் விசிக தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது
 
இதில் காயத்ரி ரகுராம் உள்பட 100 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வேண்டும் என்று காயத்ரி ரகுராம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்த நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணை அதிகாரி முன்பு 30 நாட்களுக்கு தினமும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உள்ளார்