வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (13:52 IST)

முதல்வரின் அமெரிக்க பயண தேதி அறிவிப்பு..! தொழில் முதலீடுகள் ஈர்க்க 15 நாட்கள் பயணம்..!

Stalin
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகிற 27ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார்.
 
ஜப்பான், ஸ்பெயின், துபாய் என பல நாடுகளுக்கு தொழில் முதலீடுகள் ஈர்க்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் மூலம் பல ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அதனை மேலும் அதிகரிக்கும் வகையில், வருகிற  27ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா செல்கிறார்.
 
அமெரிக்கா செல்வதற்கு மத்திய அரசிடம் இருந்து முறைப்படி அனுமதி கிடைக்கப்பட்டதையடுத்து  15 நாட்கள் அமெரிக்கா சென்று வரும் வகையில் முதல்மைச்சரின் பயணத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி  சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகளையும் முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார்.


மேலும் அமெரிக்க பயணத்தின் போது மூன்று அல்லது நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் நடைபெறவுள்ள தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு  தொழில் அதிபர்களை சந்தித்து அழைப்பு விடுக்க இருக்கிறார்.