ஜூலை 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் அறிவிப்பு!!
இந்தியாவில் வேகமாக கொரொனா இரண்டாம் அலை பரவிவருகிறது. அனைத்து மாநிலங்களிலும் இத்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவலை அடுத்து இந்தியா முழுவதிலும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லை வாயிலாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அனைத்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில் அடுத்தாண்டுக்கான பள்ளியில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஒவ்வொரு மாநில அரசும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தெலுங்கான மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து வகையான கல்வி நிறுவனங்களையும் வரும் ஜூலை 1 ஆம் தேதிமுதல் திறக்க தெலுங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது. அதேபோல் கல்வி கூடங்களைத் திறப்பதற்கான நெறிமுறைகளை கடைப்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் தற்போது நடைமுறையில் உள்ள காலை 6 மணி முதல் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.