செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 24 ஜூலை 2023 (11:03 IST)

புலியை பார்த்து கோடு போட்டு கொண்ட நாய்.. அண்ணாமலை சொன்ன குட்டிக்கதை..!

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா இன்றைய பெயர் வைக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குட்டி கதை ஒன்றை கூறியுள்ளார்
 
இது குறித்து அண்ணாமலை கூறியதாவது: ஒரு நாய்க்கு புலியாக வேண்டும் என்று ஆசை இருந்தது, அந்த நாய் ஒருவரிடம் போய் ஐடியா கேட்டது. அதற்கு அந்த நாயின் நண்பர் நீ புலி மாதிரி கோடு போட்டு கொண்டால் உன்னை எல்லோரும் புலி என்று சொல்வார்கள் என்று ஐடியா கொடுத்ததாம்.
 
உடனே அந்த நாய் புலி மாதிரி கோடு போட்டுக்கொண்டு நானும் புலி என்று சொல்லியதாம், அது போல தான் எதிர்க்கட்சி நண்பர்கள் தங்களை இந்தியா என்று சொல்லிக் கொள்வது எப்படி இருக்கிறது என்றால் புலியை பார்த்து நானும் கோடு போட்டுக் கொண்டு புலி என்று சொல்வதைப் போல் உள்ளது 
 
மக்களுக்கு தெரியும் உண்மையான இந்தியா? யார் உண்மையான பாரதம் யார் என்று. ஆனால் இவர்களுடைய வேஷம் எல்லாம் விரைவில் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும்  
 
காஷ்மீர் இந்தியாவிடம் இல்லை என்று சொன்னவர்கள், பிரிவினைவாதம் பேசியவர்கள்,  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டவர்கள் எல்லாம் இன்று ஒரு அறையில் உட்கார்ந்து இந்தியா என்று சொன்னால் மக்கள் எப்படி நம்புவார்கள் என்று தெரிவித்தார்.
 
Edited by Mahendran