ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 பிப்ரவரி 2024 (13:03 IST)

ரூ.2,000 கோடி போதைப்பொருள் விவகாரம்; முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அண்ணாமலை

Annamalai
டெல்லியில் பிடிபட்டுள்ள 2000 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுக பிரமுகர் ஜாபர் சாதிக் என்பவர் மூளையாக இருந்து செயல்படுவதாக கூறப்படும் நிலையில் இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மதுரையில் இந்த செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை ’திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் போதைப்பழக்கம் தமிழ்நாட்டில் அதிகரித்து உள்ளது என்றும் டெல்லியில் பிடிபட்டுள்ள 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் திமுக பிரமுகர் ஜாபர் சாதிக் என்பவருக்கு தொடர்பு உண்டு என்று தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார்

மேலும் ஜாபர் சாதிக் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து உள்ளார் என்றும் அவருக்கு தமிழக டிஜிபி விருது வழங்கிய கௌரவித்துள்ளார் என்றும் இந்த நிலையில் தான் அவசர அவசரமாக அவர்  திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார் என்றும் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் இது குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக் கொண்டார்


Edited by Mahendran