செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2023 (16:43 IST)

ராகுல் காந்திக்கு வேலை இல்லை என்றால் இந்தியாவிலேயே வேலைவாய்ப்பு இல்லையா? அண்ணாமலை

Annamalai
ராகுல் காந்திக்கு வேலை இல்லை என்றால் இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் வேலை இல்லை என்று அர்த்தமா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். 
 
ஆங்கில உலகம் ஒன்று ஏற்பாடு செய்த மாநாடு ஒன்றில் அண்ணாமலை கலந்து கொண்ட நிலையில் ’ராகுல் காந்திக்கு வேலையில் என்பதால் நாட்டில் உள்ள இளைஞர்கள் எல்லோருமே வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பதாக கூறுவது தவறு என்று தெரிவித்தார். 
 
தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் நல்ல பெயர் இல்லாததற்கு காரணம் காங்கிரஸ் ஏற்படுத்திய கலாச்சாரம்தான் என்றும் அவர் கூறினார். மேலும் கர்நாடக மாநில தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தாலும் தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டது என்றும் புதுச்சேரியில் நாங்கள்தான் ஆட்சியில் இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
 
 2024 தேர்தலில் தமிழகம், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் பாஜக 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran