புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (18:15 IST)

ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை: முதல்வருக்கு அண்ணாமலை கோரிக்கை

Annamalai
நீட் விலக்கு உள்பட ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நீட் விலக்கு மசோதா  திருப்பி அனுப்பப்பட்டதை அடுத்து அதற்கு பதிலாக புதிய மசோதா இயற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டது ஏன் என்பது குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார் 
 
மேலும் நரிக்குறவர் மக்களுக்கு பதவி அளித்து அழகு பார்ப்பது பாஜக மட்டும் தான் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்