புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (14:17 IST)

ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர் தீரன் சின்னமலை: அண்ணாமலை

ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர் தீரன் சின்னமலை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
தீரன் சின்னமலையின் நெருங்கிய நண்பராய், ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்து, தாய்த் திருநாட்டின் விடுதலைக்காக, தூக்குக் கயிற்றை முத்தமிட்டு உயிர்த் தியாகம் செய்த வீரன் குணாளன் நாடார் நினைவு தினம் இன்று.
 
கட்டுத்தடிக்காரன் என்று அழைக்கப்படும் குணாளன் நாடார், மாவீரனாய், இரக்க குணம் மிகுந்தவராய்த் திகழ்ந்தவர். கொங்கு மண்டலத்தில் இவர் குறித்த நாட்டுப்புறப் பாடல்கள் இன்றும் பாடப்படுகின்றன.
 
அன்றைய காலத்தில் இளைஞர்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தியதில், தீரன் சின்னமலையுடன் இணைந்து செயல்பட்ட குணாளன் நாடார் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்.
 
Edited by Mahendran