திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 ஜூன் 2021 (09:49 IST)

கருத்து சுதந்திரத்தை நசுக்காதீர்; கிஷோர் கே ஸ்வாமி கைது - அண்ணாமலை கண்டனம்!

யூட்யூப் பிரபலம் கிஷோர் கே ஸ்வாமி கைது செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

யூட்யூப் பிரபலமான கிஷோர் கே ஸ்வாமி திமுகவை சேர்ந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசியதாகவும், பெண்களை இழிவுப்படுத்தி பேசியதாகவும் தொடுக்கப்பட்ட வழக்கின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு கிஷோர் கே ஸ்வாமியின் ஆதரவாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கைது சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை “அறிவாலயம் குடும்பத்தை,அதன் தலைவர்களை விமர்சிப்பது குற்றமெனில்,கருத்து சுதந்திரத்திற்கு இங்கு இடமேது இதே அளவுகோல் பல தலைவர்களை கேலி பேசுவோருக்கு உண்டா?பொதுவாழ்க்கையில் மனஉறுதி முக்கிய பண்பு;திமுகவிற்கு அது இல்லை போல. கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்காதீர்” என்று கூறியுள்ளார்.