திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2023 (11:27 IST)

திமுக சொத்து எவ்வளவு தெரியுமா? நாளைக்கு சொல்றேன்! – அண்ணாமலை வெளியிட்ட டீசர்!

திமுகவை சேர்ந்தவர்களின் சொத்து விவரத்தை நாளை வெளியிட போவதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து திமுக தலைவர்கள் மற்றும் ஆட்சி குறித்த தொடர் விமர்சனங்களை வைத்து வருகிறார். முக்கியமாக திமுக குடும்ப கட்சி என்று கூறிவரும் அவர் திமுக குடும்பத்தினரின் சொத்து விவரங்களை விரைவில் வெளியிடுவதாக அடிக்கடி சொல்லியும் வந்தார்.

இந்நிலையில் இன்று ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை. DMK Files என்று தலைப்பிட்ட அந்த வீடியோவில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, கலாநிதிமாறன் உள்ளிட்ட திமுக குடும்பதினர் படங்கள் இடம்பெற்றுள்ளது. திமுக குடும்பத்தின் சொத்து விவரங்களை நாளை ஏப்ரல் 14ம் தேதி காலை 10.15 மணிக்கு வெளியிட உள்ளதாக அதில் அவர் தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K