1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 13 மார்ச் 2023 (18:32 IST)

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு! மாணவ மாணவிகள் ஆர்வம்..!

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர்.
 
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் எழுதுனர். 
 
இந்த நிலையில் செமஸ்டர் தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் சற்றுமுன் அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அண்ணா பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தவிர மூன்றாவது ஐந்தாவது ஏழாவது செமஸ்டர் தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகி உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த முடிவுகளை மாணவர்கள் பார்த்து தங்கள் முடிவுகளை தெரிந்து கொண்டு வருகின்றனர்.
 
Edited by Siva