வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (21:03 IST)

அண்ணா இருக்கை சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் மேலை பழநியப்பன் பேச்சு

கரூர் மாவட்டம், குளித்தலை அரசு கலைக் கல்லூரியின் தமிழாய்வுத் துறையும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அண்ணா இருக்கையும் இணைந்து அண்ணா பற்றிய சிறப்புச் சொற்பொழிவினை கரூர் அடுத்த குளித்தலை அரசு கலைக் கல்லூரியில்  நடத்தினர். இந்நிகழ்ச்சியில் அரசு கலைக் கல்லூரி முதல்வர் சு.கெளசல்யா தேவி தலைமை ஏற்றார். 
அண்ணா இருக்கை இயக்குர் முனைவர்  அ..கோவிந்தராசு இருக்கையின் நோக்கம் 
செயல்பாடுகளை விளக்கி வரவேற்புரை ஆற்றினார். 
 
கருவூர் திருக்குறள் பேரவைச் செயலர், தமிழ்ச் செம்மல் விருது பெற்ற மேலை பழநியப்பன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அண்ணா பற்றிய முழுமையான வரலாற்றுத் தொகுப்பை அடங்கிய நூலினை கல்லூரி நூலகத்திற்கு, அக்கல்லூரி முதல்வர் கெளசல்யா தேவியிடம் வழங்கி " அறிஞர் அண்ணா ஓர் சிகரம்" என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.
 
கட்டுப்பாடு என்பது திணிக்கப்படுவதோ, சட்டத்தினால் கட்டுப்படுத்துவதோ அல்ல என்ற அண்ணா, சுய கட்டுப்பாடே, கட்டுப்பாடு என்றார்.
 
கடமை என்பது ஒவ்வொருவரும் தன்னை உணர்தல் என்றும், கண்ணியம் என்பது பிறர் போற்றவும், பாராட்டவும் படியான வாழ்தல் என்றார். மேலும்., 60 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மிகச் சிறந்த பேச்சாளராய் , எழுத்தாளராய் , வசனகர்த்தாவாய், நடிகராய் , ஆளுமை ஆற்றல் மிக்கவராய் 600 ஆண்டு வரலாற்றுச் சாதனை படைத்தவர் அறிஞர் அண்ணா.
எளிமையான வாழ்வியல், தமிழும் குறளும் என் மூச்சு என்று மெட்ராஸ் ஸ்டேட் தமிழ் நாடாக அறிவிக்க எடுத்துக் கொண்ட முயற்சி அதில் வெற்றி மேல்சபை, சட்டப்பேரவை எனத் தமிழ்ப் படுத்தி தமிழிலேயே கையெழுத்திட்டு திருவள்ளுவர் படம் சட்டசபை , அரசு அலுவலகம் கல்வி நிலையங்களில் இடம் பெறச் செய்தவர் அண்ணா ஆவார். 
 
தமிழிலும் ஆங்கிலத்திலும் அடுக்கு மொழியாய் கொடுத்த தலைப்பில் எல்லாம் பேசி பேச்சுலகில் சிகரம் தொட்டவர் அறிஞர் அண்ணா, அரசியல் நாகரிகம் மிக்கவராக திகழ்ந்தவர் அறிஞர் அண்ணா இன்றைக்கு கர்நாடகாவில் இறந்த பிச்சைக்காரனின் கையிருப்பு ஒரு கோடியே சில லட்சம் ஆனால் லட்சிய வாழ்க்கை வாழ்ந்த அறிஞர் அண்ணாவின் இறந்த போது வங்கி இருப்பு ஐயாயிரம் கடன் பல ஆயிரங்கள்,  இன்றைக்கு ரஜினி ஞானஸ்கந்தனுக்கு ஒரு கோடியில் வீடு உதவி போல எஸ்.எஸ்.ஆர் உதவ வந்த போது மறுத்த எம்.ஜிஆர் அண்ணாவின் எளிமை உலகறிய வேண்டும் என்பதற்காக அண்ணா குடும்ப நல நிதி திரட்டி கடன் அடைத்து மீதியை ராணி அண்ணாதுரையிடம் தந்தார் கலைஞர் என்பது வரலாறு.
 
புகழோடு தோன்றிதக்கவர் என்பதை எச்சத்தால் உணர்த்தி உயர்ந்த புகழ் வாழ்க்கை என்பதை 50 ஆண்டு இறப்பிலும் இருக்கை நிறுவி பேசுவதே சிறப்பு என்றார்.
தமிழாய்வுத் துறைத் தலைவர் முனைவர் பொ. இரமேஷ் நன்றி கூறினார்
தமிழாய்வுத் துறை பேராசிரியர் அரிமா வைரமுத்து உள்ளிட்ட பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ்த்துறை மாணவ மாணவியர் திரளாக பங்கேற்றனர்.