திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 3 மார்ச் 2018 (13:26 IST)

மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று உள்ளது; கமல் ட்விட்டர் கருத்து

அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் கமல், அவரது டுவிட்டர் பக்கத்தில் மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக  குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் நடிகர் கமல்ஹாசன் அவரது அரசியல் பயணத்தை துவக்கினார். மேலும் மதுரையில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதனையடுத்து ஆன்லைன் மூலம் அவரது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தீவிர அரசியலில் இறங்கியிருக்கும் கமல், அரசியல் பயணத்தை துவக்கும் முன்பு அரசின் ஊழல் குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். தற்போது கமல் குற்றச்சாட்டு ஒன்றையும் வைத்து அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார். அதில், மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காவிரிப் படுகையில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்கள் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கிறது வாரியம். மாசுக்கட்டுப்பாடு வாரியமே  விழித்தெழு' இவ்வாறு பதிவு செய்துள்ளார்.